சென்னை: தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் இன்று வீடு திரும்புவார் என்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னை: தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் இன்று வீடு திரும்புவார் என்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக தோற்று காரணமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வதந்திகள் பரவியது. இந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு வலது காலில் சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர் இன்றே வீடு திரும்புவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.