கோவை: கோவை இரத்தினபுரி பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக தாய் மற்றும் மகன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை: கோவையில் குடும்ப பிரச்சினை காரணமாக தாய் மற்றும் மகன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி. இவர் அதே பகுதியில் அன்னை வாட்டர் சர்விஸ் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி குமாரி(28). இவர்களுக்கு ஹேன்ட்ரி (6) என்ற குழந்தை இருந்தது.

இந்த சூழலில், அந்தோணிக்கும், குமரிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த குமாரி நேற்று இரவு தந்து மகன் ஹேன்ட்ரியுடன், ரத்தினபுரியில் உள்ள தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்த ரத்தினபுரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடலையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்பப் பிரச்சினை காரணமாக தாய் மற்றும் மகன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.