கோவை : வால்பாறையைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை : வால்பாறையைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
வால்பாறையில் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்த சாமுவேல் என்பவரின் மகன் தாஸ் என்கிற மரியதாஸ் (42). இவர் அங்குள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த போலீசார், மதிய தாஸை குண்டர் சட்டத்தில் இன்று கைது செய்தனர். மேலும், அவர் மீது வால்பாறை காவல் நிலையத்தில் குற்ற.எண். 136/18 u/s 8(c) r/w 20(b), (ii) (B) NDPS Act ஆகிய பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, கோவை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.