இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ, இந்திய ராணுவத்துடனான தனது புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பித்துள்ளது. இதன் மூலம் இந்திய ராணுவ வீரர்களுக்கும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கும் தனது ‘டிபென்ஸ் சேலரி அக்கவுண்ட்’ மூலம் பல்வேறு சேவைகளை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வழங்கவுள்ளது.

ராணுவ வீரர்களுக்கான ஜீரோ பாலன்ஸ் அக்கவுண்ட், லாக்கருக்கான முன்னுரிமை ஒதுக்கீடு, வீரதீர செயல்களுக்காக பரிசுகளை வென்ற வீரர்களுக்கு வீட்டுக் கடன், தனிநபர் கடன் மற்றும் வாகனக் கடன்களுக்கான புராஸஸிங் கட்டணத்தில் இருந்து விலக்கு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இதன் மூலம் வழங்கப்பட உள்ளன.
மேலும், ராணுவ வீரர்கள் ஐ.சி.ஐ.சி.ஐ ஏ.டி.எம்.,கள் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி அல்லாத ஏ.டி.எம்.,களில் அளவில்லாத வகையில் இலவச பரிவர்த்தனைகளை செய்துகொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. கூடுதலாக ராணுவ வீரர்களுக்கு புதுப்பிக்கத்தக்க பயன்களில் ஒன்றாக அவர்களுக்கு காப்பீடுகளும் வழங்கப்படுகின்றன. இதன்படி விமான விபத்து இறப்பு காப்பீடாக ரூ.1 கோடியும், தனிநபர் காப்பீடாக ரூ.30 லட்சமும், பணியின்போது காயமடைந்து ஊனமடைபவர்களுக்கான காப்பீடாக ரூ.30 லட்சமும் அனைத்து ராங்குகளைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கும் வழங்கப்படுகிறது.
ராணுவ வீரர்கள் விபத்துகளின்போது இறந்தால் அவர்களின் 2 வாரிசுகளுக்கு அவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த அடுத்த 4 ஆண்டுகளுக்கு மேற்படிப்புக்காக ஆண்டுதோறும் தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திடும் நிகழ்ச்சிக்கு இந்திய ராணுவத்தின் லெப்டினென்ட் ஜெனரல் எஸ்.கே. சைனி, தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் வங்கியின் மூத்த பொது மேலாளர் மற்றும் பிராந்திய வர்த்தக தலைவரான திரு குமார் ஆஷிஷ் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.