கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி 74வது வார்டில் பூங்காக்கள் அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி 74வது வார்டில் பூங்காக்கள் அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 74வது வார்டு ருக்மணி நகரில் ரூ.99 லட்சம் மதிப்பிலும், தெற்கு சிவராம் நகர் தெற்கு பகுதியில் ரூ.99 லட்சம் மதிப்பிலும், சிவராம் நகர் மேற்கு பகுதியில் ரூ.94 லட்சம் மதிப்பிலும், மொத்தம் ரூ.2 கோடியே 92 லட்சம் மதிப்பில் 3 பூங்காக்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜய கார்த்திகேயன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை தரமானதாகவும் விரைந்து முடிக்குமாறும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது மத்திய மண்டல உதவி ஆணையர் செந்தில்குமார் ரத்தினம், உதவி நகரமைப்பு அலுவலர் செந்தில்பாஸ்கர், பொறியாளர்கள் சுந்தர்ராஜ், ஜீவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.