நீலகிரி: குன்னுார் அருகே உள்ள நெடுகல் கொம்பை ஆதிவாசி கிராமத்தில் மாவோயிஸ்ட் ஊடுருவலை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

குன்னுார் அருகே தமிழக கேரள எல்லை பகுதியையொட்டி கிண்ணக்கொரை, கெத்தை, இரியசீகை, நெடுகல் கொம்பை, முப்பர்காடு உள்ளிட்ட பல்வேறு பழங்குடியினர் கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளன. இந்த நிலையில் கேரள மாநில வனப்பகுதி வழியாக மாவோயிஸ்ட் ஊடுருவி இப்பகுதியில் உள்ள பழங்குடியின கிராம மக்களை திசை திருப்பி பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுத்த வாய்ப்பிருப்பதாக காவல்துறையினர் கருதி வருகின்றனர்.
இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா இந்த கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், பழங்குடியின மக்களுக்காகவும், அவர்களின் குழந்தைகளின் நலனுக்காகவும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், இந்தப் பகுதியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் கல்வி பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு அறிவுரைகளை வழங்கியதோடு, அவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார்.