நீலகிரி : மினி உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணிக்கு விளையாட மூன்று கால்பந்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அக்டோபர் 4-7 ஆகிய தேதிகளில், செக் குடியரசு நாட்டில் நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட வீரர்கள் நிதியுதவி இல்லாமல் உள்ளனர்.

தேர்வு செய்யப்பட வீரர்களான பொருளாதாரம் இரண்டாம் ஆண்டு பயிலும் பிரவீன், மூன்றாம் ஆண்டு பயிலும் ராகுல் மற்றும் அஜித் குமார் ஆகியோர் பின் தங்கிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு நாடு கடந்து விளையாடச் செல்லும் அளவுக்கு நிதி இல்லை என்கிறார் அவர்களின் பயிற்சியாளர் மோசஸ் டேனியல்.
இந்திய அணிக்காக 15 பேர் தேர்வு செய்யப்பட நிலையில், அதில் மூவர் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த மூவரும் உதகை அரசு கலைக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள். இந்த இளம் வீரர்களுக்கு தேவையான நிதியை திரட்டும் பணியில் தற்போது கல்லூரி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
விளையாட்டு வாரியம் மற்றும் நன்கொடையாளர்களிடம் இருந்து தற்போது வரை ரூ. 70 ஆயிரம் நிதி திரட்டப்பட்டுள்ளது. ஆனால், அவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிதி வரும் வியாழக்கிழமைக்குள் தேவைப்படுகிறது.
அவர்களுக்கு உதவ பின்வரும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் : +91 97861 76734 ( மோசஸ் டேனியல்)