திருப்பூர்: கூரையேறி கோழி பிடிக்க முடியாதவர்கள் எல்லாம் வானம் ஏறி வைகுண்டம் போக முடியாது என திருப்பூரில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் டி.டி.வி தினகரனை கடுமையாக சாடி துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியே காரணம் எனவும், அதற்கு காரணமான இரு கட்சிகளையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் எனவும், அ.தி.மு.க சார்பில் மாவட்டம் தோறும் கண்டன பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக திருப்பூரில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் கலந்துகொண்டனர். அதில் பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், "அ.தி.மு.க பல சோதனைகளை கடந்தாலும் வெற்றி வாகை சூடியுள்ளது. ஆனால், நம் இயக்கத்தில் பதவியை பெற முடியாதவர்கள் எல்லாம் இன்று ஊர் ஊராக ஆட்களை திரட்டிக்கொண்டு மக்கள் செல்வாக்கு இருப்பது போல காட்டி வருகின்றனர். கூரையேறி கோழி பிடிக்க முடியாதவர்கள் எல்லாம் வானம் ஏறி வைகுண்டம் போக முடியாது. எத்தனை சோதனை வந்தாலும் அதனை அ.தி.மு.க கடந்து வரும். தமிழர்களுக்கு துரோகம் இழைத்த தி.மு.க காங்கிரஸ் கூட்டணி சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்."என்று பேசினார்.