கோவை: கோவையில் கருமத்தம்பட்டி மற்றும் அன்னூர் போன்ற பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் காவல் துறையும் பிரிந்து தனித்தனியாக நடத்திய சோதனையில் மொத்தம் 2,800 கிலோ குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா குறித்த ஆய்வினை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சோதனைகளில் டன் கணக்கான பான் மசாலா குட்கா பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து அதிகாரிகளின் சோதனைகள் இருந்தும் பல்வேறு பகுதிகளில் உள்ள, வீடுகள் மற்றும் குடோன்களில் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு வருகின்றது.

இதை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கண்காணித்து பறிமுதல் செய்து வருகின்றனர். காவல் துறையும் திடீர் சோதனையில் ஈடுபட்டு பான் மசாலா குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
அதிரடி
அன்னூரில் உள்ள மசக்கவுண்டன்பாளையம் பகுதியில் இருக்கும் பாலாஜி கார்டனில், தங்கசிங் என்பவரின் குடோனில்
தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் திடீரென குடோனுக்குள் சென்ற போலீசார், அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குடோனில் மூட்டை மூட்டையாக பான் மசாலா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதைக் கண்ட காவல்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
குடோன் முழுவதும் சோதனை செய்ததில் 17 லட்சத்து 22 ஆயிரத்து 240 ரூபாய் மதிப்பிலான 2,350 கிலோ குட்கா பொருட்களை அன்னூர் போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல குடோன் உரிமையாளர் பட்டுராஜன் மற்றும் வாடகைக்கு எடுத்து குட்கா பொருட்களை பதுக்கி வைத்த தங்கசிங், குடோன் ஊழியர் சாந்தகுமார் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் ஊழியர் சாந்த குமாரை மட்டும் கைது செய்துள்ளனர்.
மேலும், குட்கா குடோனில் இருந்த ரூ. 3.5 லட்சம் மதிப்புடைய கார் மற்றும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்யப்பட்டது.
குட்கா குடோன்
கருமத்தம்பட்டி பகுதியில் ஒரு குட்கா குடோன் இயங்கி வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சோதனை நடத்திய போது, ஸ்ரீ கிருஷ்ணா என்ற மளிகைக் கடை நடத்தி வரும் மாதாராம் என்ற வட மாநில இளைஞருக்கு சொந்தமான இடத்தில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து 450 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமாராக நான்கரை லட்ச ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு ஆய்விற்கு அனுப்ப உள்ளதாகவும், ஆய்வறிக்கையின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
காவல்துறையும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் அடிக்கடி தொடர் சோதனைகளில் ஈடுபட்டு வந்தாலும் இன்னும் பல்வேறு பகுதிகளில் பான் மசாலா குட்கா பொருட்கள் எளிமையாக பொதுமக்களிடம் வந்தடைகிறது. இதை கட்டுப்படுத்த ஒவ்வொரு காவல் எல்லையில் உள்ள போலீசாரும் இதற்கென தனி கவனம் செலுத்தி பொது மக்களை இணைத்து குட்கா பொருட்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.