நீலகிரியில் அரசு பேருந்தை வழிமறித்து நிறுத்திய காட்டு யானைகளால் பயணிகள் பீதி

நீலகிரி : நீலகிரி மாவட்டம் மஞ்சூர் முள்ளி மலை பாதையில் அரசு பேருந்தை வழி மறித்த காட்டு யானைகளால் பயணிகள் பீதியடைந்தனர்.


நீலகிரி : நீலகிரி மாவட்டம் மஞ்சூர் முள்ளி மலை பாதையில் அரசு பேருந்தை வழி மறித்த காட்டு யானைகளால் பயணிகள் பீதியடைந்தனர்.

மஞ்சூரில் இருந்து புறப்பட்டு முள்ளி வழியாக கோவை சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை மாலை நேரத்தில் யானைகள் கூட்டம் வழி மறித்தது. சுமார் முக்கால் மணி நேரத்திற்குப் பின் இவை தானாக வனப்பகுதிக்குள் சென்றதால் பேருந்து பணிகள் நிம்மதி அடைந்தனர். , இந்த 

மஞ்சூர் - முள்ளி சாலையின் ஓரத்தில் வனப்பகுதிகள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த சாலை வழியாக கேரளா, கோவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அதிகளவில் வாகனங்கள் வந்து செல்கின்றன. கடந்த பல வாரங்களாக பெய்து வந்த மழையின் காரணமாக சாலை ஓரங்களில் அதிகளவில் புற்கள் வளர்ந்து பசுமையாக காட்சி அளிக்கின்றன. இதனை உட்கொள்ள இப்பகுதிகளில் உள்ள யானைகள் கூட்டம், கூட்டமாக சாலைகளுக்கு வந்த வண்ணம் உள்ளன. இதனால், வாகனங்களைப் பாதுகாப்பாக இயக்க வனத்துறை அறிவுறுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், மஞ்சூரிலிருந்து முள்ளி வழியாக அரசு பேருந்து ஒன்று கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலையில் காட்டு யானைகள் கூட்டமாக பேருந்திற்கு வழிவிடாமல் நின்று கொண்டிருந்தன. சுமார் 45 நிமிடங்கள் சாலையில் நின்று விட்டு வனப்பகுதிக்குள் மீண்டும் திரும்பின. இதனையடுத்து, ஒட்டுநர் அங்கிருந்து பேருந்தை இயக்கினார். யானைகள் வழிமறித்ததால் பீதியடைந்த பயணிகள், அவை அமைதியாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றதால் நிம்மதி அடைந்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...