கோவை : பி.எஸ்.ஜி., பார்மஸி கல்லூரி மற்றும் இந்திய பார்மஸி கூட்டமைப்பு சார்பில் இன்று சர்வதேச மருந்தாளுனர்கள் தினம் அனுசரிக்கப்பட்டது.

பி.எஸ்.ஜி., மருத்துவமனையின் கருத்தரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்திய பார்மஸி கூட்டமைப்பின் மும்பை பிராந்தியத்தின் தொழிற்நிறுவன பிரிவின் துணைத் தலைவர் ஜெ. ஜெயசீலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், பி.எஸ்.ஜி., மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் தலைவர் எஸ். ராமலிங்கம் கலந்து கொண்டு, மாணவர்களிடையே உரை நிகழ்த்தினார்.

அவர் பேசியதாவது :- அனைத்து நேரங்களிலும் பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகளை மருத்துவர்களால் அளிக்க முடியாது. ஆனால், பார்மஸி துறையில் இருப்பவர்கள் பொதுமக்களின் நலனின் அடிப்படை காரணிகளாக இருக்கின்றனர், என்றார்.

இந்த நிகழ்ச்சியில் 700-க்கும் மேற்பட்ட பார்மஸி துறையைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும், நடத்தப்பட்ட பார்மஸி தொடர்பான போட்டிகளில் வெற்றி பெற்ற பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 15 மாணவர்களுக்கு சான்றிதழ்கள், நினைவுப்பரிசுகள் மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.