கட்டிட மறுசுழற்சி மையத்தை அமைக்க 'மறுசுழற்சி' முறையில் டெண்டர் அறிவிக்கும் கோவை மாநகராட்சி

கோவை : உக்கடம் பகுதியில் கட்டிடக்கழிவு மறுசுழற்சி திட்டப்பணிகளை மேற்கொள்வதில் தாமதம் செய்து வந்த நிறுவனத்தின் ஒப்பந்த உரிமம் ரத்து செய்யப்பட்டதையடுத்து, டெண்டர் மூலம் வேறொரு தனியார் நிறுவனம் விரைவில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளது.

கோவை : உக்கடம் பகுதியில் கட்டிடக்கழிவு மறுசுழற்சி திட்டப்பணிகளை மேற்கொள்வதில் தாமதம் செய்து வந்த நிறுவனத்தின் ஒப்பந்த உரிமம் ரத்து செய்யப்பட்டதையடுத்து, டெண்டர் மூலம் வேறொரு தனியார் நிறுவனம் விரைவில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளது.

கட்டிடக் கழிவுகளால் நீர்நிலைகள் :- 

கோவை மாநகரில் சேகரிக்கப்படும் கட்டிடக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய வழியின்றி, பல்வேறு நீர்நிலைகளிலும், குளங்களிலும் கொட்டப்பட்டு வருகின்றது. இதனால், கோவையில் பிரதான குளங்கள் மற்றும் ஆறுகளில் நீர் தங்கு தடையில்லாமல் ஓடுவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, இதனை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கட்டிடக் கழிவு மறுசுழற்சி மையம் :- 

அதன்படி, நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் கட்டிடக்கழிவுகளை மறுசுழற்சி செய்து செங்கல் மற்றும் பேவர்பிளாக் கற்கள் போன்ற கட்டுமானப் பொருட்களை தயாரிப்பதற்கான கட்டிடக்கழிவு மறுசுழற்சி மையத்தை உருவாக்க திட்டமிடப்பட்டது. இதற்கான திட்டத்தை செயல்படுத்த கடந்த 2017-ம் ஆண்டில் சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டது. 

மேலும், உக்கடம் பகுதியில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைக்க முடிவு செய்யப்பட்டு, ரூ. 9 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஒரு டன் கழிவுக்கு ரூ. 567 தனியார் நிறுவனத்திற்கு வழங்க மாநகராட்சியால் முடிவு செய்யப்பட்டது.

சிக்கலும்.... தாமதமும்....

கட்டிடக்கழிவு மறுசுழற்சி மையத்திற்கு தேவையான இயந்திரங்கள் சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, வரி கட்டண பிரச்சனையால் துறைமுகத்தில் இருந்து இயந்திரங்களை வெளியே எடுத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்தின் தரப்பில் தொடர்ந்து கூறப்பட்டது. கோவையில் கட்டிடக்கழிவு மறுசுழற்சி மையம் அமையுமா என்ற சந்தேகம் ஏற்படும் வகையில், எந்தவித காலவரையறையும் அறிவிக்காமல் பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

'மறுசுழற்சி'யில் டெண்டர் முறை : 

மேலும், கட்டிடக்கழிவு மறுசுழற்சி மையத் திட்டப்பணிகளை தொடங்குமாறு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்திற்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், பதில் வராததால் ஒப்பந்தம் செய்யப்பட்ட தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த உரிமத்தை மாநகராட்சி நிர்வாகம் கடந்த மே மாதம் ரத்து செய்தது. இந்நிலையில், மீண்டும் டெண்டர் நடத்தப்பட்டு நிறுவனம் தேர்ந்தெடுக்கப்படும் என தெரியவந்துள்ளது. மேலும், முந்தைய ஒப்பந்தம் முழுக்க, முழுக்க தனியாரின் நிதியில் மட்டுமே மேற்கொள்ளவிருந்ததால், இந்தத் திட்டம் தோல்வியை தழுவியது.

ஒருவேளை அரசின் நிதி பங்கீட்டில் மேற்கொண்டிருந்தால், இந்த திட்டம் இந்த நேரம் முழுமையடைந்திருக்குமோ என்ற எண்ணமும் கோவை மக்களிடையே எழுந்துள்ளது. மேலும், மாநகராட்சியின் பங்கு இல்லாததால், தனியாரின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பவோ, திட்டத்தின் நிலை பற்றி அறிய முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில், கட்டிடக் கழிவு மறுசுழற்சி மையத்தை அமைக்கும் பணியை விரைந்து முடிக்கவும், கோவையின் நீர்நிலைகளைப் பாதுகாக்கும் வகையில், திட்டத்திற்கு தமிழக அரசு, கோவை மாநகராட்சி மற்றும் ஒப்பந்தம் செய்யப்படும் தனியார் நிறுவனத்தின் பங்கு என மூன்று தரப்பில் இருந்து நிதி பகிரப்படுகிறது. 

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க. விஜயகார்த்திகேயன் கூறியதாவது:- உக்கடம் கட்டிட மறுசுழற்சி மையம் அமைப்பதற்காக புதிய தனியார் நிறுவனம் டெண்டர் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒப்பந்தம் செய்யப்படவுள்ளது. முன்னர், செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் தனியார் நிறுவனத்தின் முதலீடு மட்டுமே இருந்தது, புதிதாக செய்யப்படவுள்ள ஒப்பந்தத்தில் மாநில அரசு மற்றும் மாநகராட்சியின் நிதி பங்கீட்டோடு திட்டத்தை செயல்படுத்த ஆலோசித்து வருகிறோம். நிதி ஒப்புதல் கிடைத்ததும், டெண்டர் மூலம் புதிய நிறுவனம் தேர்வுசெய்யப்பட்டு பணிகள் துவங்கும், என்றார்.

நீர்நிலைகளை பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கையான கட்டிடக்கழிவு மறுசுழற்சி மையம் அமைக்கும் பணிகள் பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், இந்தத் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் பெரும் கோரிக்கையாக உள்ளது. 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...