கோவை : கே.எம்.சி.எச்., மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த போது மூளைச்சாவடைந்த ஈரோட்டைச் சேர்ந்த 50 வயது பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பெத்தாம்பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவரின் மனைவி இந்திராணி (50). இவர் கடந்த 19-ம் தேதி ரத்த அழுத்தம் அதிகமாகி மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு சுயநினைவை இழந்தார். இதைத் தொடர்ந்து, உடனடியாக அவர் கோவை கே.எம்.சி.எச்., மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், கடந்த நேற்று அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவரது கணவர் முத்துசாமி, மனைவி இந்திராணியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தார். அவரது சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகியவை தானமாக பெறப்பட்டது. சிறுநீரகங்கள் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், கல்லீரல் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், வழங்கப்பட்டது.
இது குறித்து கே.எம்.சி.எச்., மருத்துவமனை தலைவர் நல்லா ஜி பழனிசாமி கூறுகையில், "மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால். அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். பின்னர், உடல் உறுப்பு தானம் வழங்கிய இந்திராணியின் குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.