கோவை : பேரூர் நொய்யல் ஆற்றில் மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய இளைஞர் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

பேரூரைச் சேர்ந்த முருகதாசின் மகன் விக்கி (22) என்ற விக்னேஷ். இவருக்கு திருமணமாகி ஒரு வயது குழந்தை உள்ளது. இவர் அதே பகுதியில் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், விக்னேஷ் இன்று மாலை அவரது நண்பர்களுடன் பேரூர் கோயிலில் உள்ள நொய்யல் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்று உள்ளார். சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக நீரில் இறங்கி மீன்பிடித்து வந்தார். பின்னர் சுமார் 5.30 மணியளவில் மழை வந்ததையடுத்து கரை திரும்பினார்.
பின்னர், அங்குள்ள தண்ணீர் குழாயில் கை கால்கள் கழுவிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென இளைஞர் மீது இடி, மின்னல் விழுந்தது. இதில் அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் 108 அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, விரைவாக வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில், இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரது உடலைப் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நொய்யல் ஆற்றில் மீன் பிடிக்க சென்ற இளைஞர் மீது மின்னல் தாக்கி பலியான சம்பவம் அந்தப் பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.