நீலகிரி : உலக மருந்தாளுனர்கள் தினத்தை முன்னிட்டு உதகையில் இன்று தனியார் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஆண்டுதோறும் செப்டம்பர் 25-ம் தேதி உலக மருந்தாளுனர்கள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, உதகையில் இயங்கி வரும் சர்வதேச தனியார் மருந்தாக்கியல் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இதில், சுமார் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இப்பேரணியில் மருந்துகளால் கேடு விளைவப்பத்தில் இருந்து தவிர்க்கும் முன் யோசனைகளான, மருந்துகளை குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும், காலாவதியான மற்றும் பயன்படுத்தாத மருந்துகளை அப்புறப்படுத்தி விட வேண்டும், மருந்துகளை குப்பையில் போடக் கூடாது, காலியான மருந்து பாட்டிலை வேறு எதற்கும் உபயோகிக்க வேண்டாம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.
இப்பேரணி உதகை சேரிங்கிராஸ் பகுதியில் தொடங்கி ஏ.டி.சி., காந்தி திடலில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து, குடுவை மற்றும் கேப்சூல் போன்ற முத்திரைகளை கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி மூலம் உருவாக்கியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.