நீலகிரி : குன்னூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
நீலகிரி : குன்னூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த தென்மேற்கு மழையின் தாக்கம் கூடலூர் பகுதியில் அதிகம் இருந்த நிலையில், உதகை, குன்னூர், கோத்தகிரி, கேத்தி, கொலக்கம்பை போன்ற பகுதிகளில் இந்த மழையின் தாக்கம் குறைந்தே காணப்பட்டது.
இதனிடையே, வடகிழக்கு மழையின் தாக்கம் குன்னூர் பகுதியில் அதிகம் இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. கடந்த சில நாட்களாக குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மூடுபனியும் உருவானது. இந்த நிலையில், இன்று மதியம் திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய தொடங்கியது. சில மணிநேரம் தொடர்ந்து பெய்த இந்த மழையின் காரணமாக பள்ளங்கள் மற்றும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது