கோவை: கோவையில் உள்ள டிராபிகானா நிட்டிங் என்ற நிறுவனத்தில் பணிபுரியும் கணக்காளர் தனது நிறுவனத்தில் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை கையாடல் செய்துள்ள சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

துடியலூரில் டிராபிகானா நிட்டிங் என்ற தனியார் பனியன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு இருகூரைச் சேர்ந்த உதயநிதி (31), என்பவர் கணக்காளராக பணியாற்றி வந்தார். இவர் ரெடிமேடு உற்பத்திக்காக மூலப்பொருள்கள் வாங்கியதற்கு பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு இந்த தொழிற்சாலை சார்பில் வங்கிகள் மூலம் பணம் அனுப்பும் பொறுப்பை கவனித்து வந்தார்.
அப்போது அவர் பனியன் தொழிற்சாலைக்கு சொந்தமான சுமார் ஒரு கோடியே ஒரு லட்சத்தை தனது வங்கி கணக்கிலும், உறவினர்களின் வங்கிக் கணக்கிலும் சேர்த்து கையாடல் செய்ததாக புகார் எழுந்தது.
இந்த மோசடி குறித்து கணக்காளர் மீது பனியன் தொழிற்சாலை அதிகாரி சக்தி கோவை மாவட்ட குற்றப் பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கணக்காளர் உதயநிதியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவரது மோசடி குற்றத்திற்கு துணை இருந்தவர்களையும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.