கோவை : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெரியார் சிலைகளை சேதப்படுத்தியக் கண்டித்து கோவை அரசு கலை கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெரியார் சிலைகளை சேதப்படுத்தியக் கண்டித்து கோவை அரசு கலை கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூரில் அண்மையில் நிகழ்ந்த பெரியார் சிலை அவமதிப்பு சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதேபோல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெரியார் சிலைகள் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், பெரியார் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை அரசு கலை கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பினர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு, பெரியார் சிலைகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இழிவான கருத்துக்களை கூறி வரும் பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜாவைக் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், போராட்டத்தின் போது பெரியார் திராவிடம் வெல்லட்டும் எனவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
மேலும், பெரியார் சிலைகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு மவுனமாக இருப்பதாகவும், நடவடிக்கை எடுக்காத முதலமைச்சருக்கும் அவர்கள் கண்டனம் தெரிவித்துக் கொண்டனர்.