கோவை : சூலூர் அருகே தனியார் கல்லூரி பேராசிரியை வீட்டில் 33 பவுன் தங்க நகை மற்றும் 15 லட்ச ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூலூர் அடுத்துள்ள சிந்தாமணி புதூரைச் சேர்ந்த சத்ய நாராயண நகர் பகுதியில் பனியன் நிறுவன உரிமையாளர் பிரவீன் குமார் (45) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சவிதா கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். இந்நிலையில் நேற்று இருவரும் பணிக்கு சென்று விட்டு இரவு 8 மணியளவில் வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், உள்ளே சென்று பார்த்த போது, படுக்கை அறையில் பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்து 33 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 15 லட்சம் ரொக்கம் கொள்ளை போய் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, சூலூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, அங்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் பழைய குற்றவாளிகளா..? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெறும் கொள்ளை சம்பவங்கள் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.