கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி 56-வது வார்டில் மாநகராட்சி பணியாளர்கள் துப்புரவு தூய்மைப்பணிகள் மேற்கொண்டதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி 56-வது வார்டில் திருமகள் நகரில் மாநகராட்சி பணியாளர்கள் துப்புரவு பணிகள் மேற்கொண்டதையும், கொசு மருந்து அடிக்கும் பணிகள் நடைபெற்றதையும், பிளீச்சிங் பவுடர் தெளித்து தூய்மைப் பணிகள் மேற்கொண்டதையும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், திருமகள் நகர் வீதிகளில் பொதுமக்களிடம் வீடு வீடாகச் சென்று குடிநீர் தடையின்றி வருகிறதா? எனவும், மின்விளக்குகள் சரியாக எரிகிறதா? எனவும், மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து மாநகராட்சி பணியாளர்களிடம் வழங்கப்படுகிறதா? எனவும் பொதுமக்களிடம் ஆணையர் நேரில் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
பின்னர் மாநகராட்சிக்கு சொந்தமான முல்லைக்காடு காலியிடத்தை பார்வையிட்டு, இடத்தின் பராமரிப்பு குறித்து பணிகள் மேற்கொள்ள ஆய்வு செய்தார். செம்மொழிப் பூங்காவை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர் மின் விளக்குகள் பராமரித்திடவும், தூய்மைப் பணிகள் மேற்கொள்ளுமாறும், சங்கனூர் பள்ளத்தின் கரையோரங்களில் செடிகளை அகற்றுமாறும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதி, செயற்பொறியாளர் லட்சுமணன், நகர் நல அலுவலர் சந்தோஷ்குமார், கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் ரவிக்குமார், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.