ஈரோடு: கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் சரியான முகாந்திரம் இல்லை என்று கூறி குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து கோபி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னட நடிகர் ராஜ்குமாரை கடந்த 2000-ம் ஜூலை 30-ம் தேதி ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகேயுள்ள தொட்டகாஜனூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் தங்கியிருந்த போது சந்தன மர கடத்தல் வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா மற்றும் அவனது கூட்டாளிகள் 11 பேர் சேர்ந்து துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.
பின்னர், ராஜ்குமார் 108 நாட்கள் பிணைக் கைதியாக வைத்திருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தனர். கடந்த 18 வருடம் 2 மாதங்களாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது.
7 வருடங்களுக்கு முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை 10 நீதிபதிகள் இதுவரை விசாரித்து வந்தனர். இந்நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என கடந்த 17 ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட கோவிந்தராஜ், அன்றில், பசுவண்ணா, புட்டுச்சாமி, கல்மண்டிராமன், மாரன், செல்வம், அமிர்தலிங்கம், நாகராஜ் ஆகிய 9 பேர், நீதிபதி முன்பு ஆஜரானார்கள்.
வழக்கை விசாரித்த நீதிபதி மணி, வழக்கில் சரியான முகாந்திரம் இல்லை என்று கூறி குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கு தமிழகம் மற்றும் காநாடகா மாநிலம் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால், சிறப்பு விசாரணைக்காக கோவை சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளிலும், இந்திய படைக்கலன் சட்டப்படியும், மற்றும் வெடி பொருள் சட்டப்படியும் கோபி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் 47 பேர் சாட்சியளித்துள்ளனர். மேலும், சந்தன கடத்தல் வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா ஆகியோர் மீது கோபி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பாகவே போலீசாரால் 2004-ம் ஆண்டு
என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலும், வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த போதே கன்னட நடிகர் ராஜ்குமார், மற்றும் அவரது மனைவி பருவதம்மாள் ஆகியோர் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தனர். கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த தீர்ப்பு வெளியாவதையொட்டி காலை 9 மணி முதல் நீதிமன்றத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.