திருப்பூர்: பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயணகவியின் 120-வது பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.

திருப்பூா் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த நாராயணகவி 4-ம் வகுப்பு மட்டுமே படித்திருந்தாலும், தம் கூர்ந்த மதியால் நையாண்டிபாடல், தெருக்கூத்து, புரவிநாட்டியம், தப்பட்டை அடித்தல் உள்ளிட்ட தமிழர் கலைகளை கற்றவர். கவிதைகள் பல எழுதியுள்ள இவருக்கு கலைமாமணி, பெரியார் பெருந்தொண்டா், சிறந்த பாடலாசிரியர் உள்ளிட்ட விருதுகள் கிடைத்துள்ளது.

நாராயணகவியின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்கக் கோரி கடந்தாண்டு உடுமலை பொதுமக்கள் சார்பில் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. மக்களின் கோரிக்கையை ஏற்று அவரது பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாட அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
தொடர்ந்து அவரது பிறந்த நாளான இன்று உடுமலை தளி ரோட்டில் உள்ள நாராயணகவி மணிமண்டபத்தில் உள்ள பகுத்தறிவு கவிராயர் நாராயணகவி சிலைக்கு கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன், காங்கயம் சட்ட மன்ற உறுப்பினர் தனியரசு, மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், "நாராயணகவி பிறந்த ஊரில் மணிமண்டபம் அமைப்பதற்கு பரிந்துரை செய்யப்படும். உடுமலையில் அவர் பெயரை சொல்லும் அளவிற்கு தகுதியான இடத்தைத் தேர்வு செய்து, அவர் பெயர் சூட்டுவதற்கும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.