கோவை: கைதிகள் சொகுசு வாழ்க்கை புகாரின் எதிரொலியாக புழல் சிறை அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் புழல் சிறைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புழல் சிறையில் உள்ள தண்டனைக் கைதிகள், சிறைக்குள் உல்லாசமாக வாழ்க்கை நடத்திவருவது சமீபத்தில் வெளியான புகைப்படங்கள் மூலம் தெரியவந்தது. இதில் கைதிகளின் சுகபோக வாழ்கையும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாக, புழல் சிறைக்குள் அதிரடி ஆய்வு செய்யப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைச்சாலைகளிலும் சோதனை நடத்த சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி அசுதோஷ் சுக்லா உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள சிறைத் துறை அதிகாரிகள் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்ட அறிக்கையில், "சென்னை புழல் சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி, புதுக்கோட்டை மாவட்ட சிறை மற்றும் இளைஞர் சிறை கண்காணிப்பாளராகவும், கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமார், சென்னை புழல் சிறை கண்காணிப்பாளராகவும் மாற்றம் செய்யப்படுகின்றனர்.
கோவை மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த கிருஷ்ணராஜ் பதவி உயர்வு பெற்று அதே சிறையில் கண்காணிப்பாளராகவும், திருச்சி மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் முருகேசன் பதவி உயர்வு பெற்று அதே சிறையில் கண்காணிப்பாளராகவும், சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளராக இருந்த ஆண்டாள் வேலூர் சிறைக்கும், திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன் கடலூர் சிறை கண்காணிப்பாளராகவும் மாற்றம் செய்யப்படுகிறார்கள்." இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.