ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் 3 மாதங்களுக்குள் தமிழ் இருக்கைக்கான அறிவிப்பு : கோவையில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பேட்டி

கோவை: ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மூன்று மாதங்களுக்குள் தமிழ் இருக்கைக்கான ஆய்வறிக்கை பெயர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.


கோவை: ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மூன்று மாதங்களுக்குள் தமிழ் இருக்கைக்கான ஆய்வறிக்கை பெயர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 

கோவை உற்பத்தித் திறன் குழு அமைப்பின் 60ம் ஆண்டு பொன்விழா அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதி அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், "நீட்ஸ் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.5 கோடி ரூபாய் வரை குறைந்த வட்டியில் முதலீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக 1000 பயனாளிகள் தேர்வு செய்யப்பட வேண்டிய நிலையில் 750 விண்ணப்பங்கள் மட்டுமே ஆண்டுக்கு பெறப்படுகிறது. பயனாளிகளை கண்டறிவதில் சிரமம் இல்லை என்றாலும், ஆர்வமுள்ளவர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்படுவதால் எண்ணிக்கை குறைவாக உள்ளது. 

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மூன்று மாதங்களுக்குள் தமிழ் இருக்கைக்கான ஆய்வறிக்கை பெயர் குறித்த அறிவிப்பு வெளியாகும். அதற்கான முழுத் தொகையும் கடந்த மார்ச் மாதமே செலுத்தப்பட்டுவிட்டது. முதலமைச்சரின் உத்தரவுப்படி மலாய், யாழ்ப்பாணம் உள்ளிட்ட சர்வதேச பல்கலைக்கழகங்களில் ஆய்வறிக்கைகளைத் தொடங்குவது தொடர்பாக தொடர்ந்து அதிகாரிகள் மட்டத்தில் கலந்தாலோசனைகள் நடைபெற்று வருகிறது." என்றார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...