பிரதமரை ஸ்டாலின் தேர்ந்தெடுக்கும் காலம் வரும் : உதகையில் நடைபெற்ற கருணாநிதியின் புகழஞ்சலி நிகழ்ச்சியில் திருச்சி சிவா பேச்சு

நீலகிரி: உதகையில் தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதியின் புகழஞ்சலி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்சி சிவா செய்தியாளர்களிடம் பேசுகையில், "70 ஆண்டுகளாக பராசக்தி என்ற திரைப்படம் இன்றும் உயிரோடு இருக்கிறது என்றார்.

நீலகிரி: உதகையில் தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதியின் புகழஞ்சலி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்சி சிவா செய்தியாளர்களிடம் பேசுகையில், "70 ஆண்டுகளாக பராசக்தி என்ற திரைப்படம் இன்றும் உயிரோடு இருக்கிறது என்றார்.

கலைஞரை பற்றி உருக்கமாக பேசிய திருச்சி சிவா, 'காகிதம் ஓடம்' என்ற பாடலை பாடி கண்கலங்கினார். பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர், தமிழகத்தில் ஆளுக்கொரு சட்டமா? என்ற கேள்வி எழுப்பினார்.



சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தவுடன் கைது செய்கின்றனர். சிலர் மீது பல வழக்குகள் இருந்த போதிலும். உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்காத போதிலும் அவர்களை கைது செய்யாமல், அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்து வரும் கையாளாகாத தமிழக அரசு என சாடி பேசினார்.

எச்.ராஜா பொறுப்பற்ற முறையிலும், கலவரம் உருவாக்கும் வகையிலும் பேசி வருகிறார். ஆனால், தமிழகத்தில் உள்ள கையாளாகாத அரசு அவரை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கின்றது. ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு மதம், ஒரு இனம், ஒரு கலாச்சாரம் என மாற்ற நினைக்கிற மத்திய அரசின் இந்த ஆட்சியை மாற்ற வேண்டும் என்று ஸ்டாலின் கூறி வருவதாக சுட்டிக் காட்டினார்.



இந்திய பிரதமர் யார் என்பதை அறிவாலயத்தில் இருந்து ஸ்டாலின் முடிவு செய்யும் காலம் வரும் என்றும், எதிர்க் கட்சிக்கு எதிராக ஆளுங்கட்சி போராட்டத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, ஆளுங்கட்சியினர் எதிர்க் கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்துவது சட்ட விரோதம் என பாஜக.,வினர் கர்நாடக ஆளுநரிடம் புகார் தெரிவித்துள்ளனர். அதனைப் பார்த்தே தமிழகத்தில் ஆளுங்கட்சியினர் எதிர்க்கட்சிக்கு எதிராக போராட்டங்களை அறிவித்துள்ளனர். 

தேர்தல் வரும் போது, தமிழகத்தில் உள்ள ஊழல் அரசுக்கு மக்கள் பாடம் புகுட்டுவார்கள். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் தான், இழந்ததை மீண்டும் பெற முடியும்." என்றார். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...