கோவை: கோவையில் போலி மது பாட்டில்களை விற்ற விவகாரத்தில் இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அன்னூர்-சக்தி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, இருசக்கர வாகனத்திற்குள் 20 போலி மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், கருமத்தம்பட்டியை சேர்ந்த பிரபு என்பது தெரியவந்தது. கடந்த 22ம் தேதி அன்னூர் பகுதியில் இவரிடமிருந்து மணிகண்டன் என்பவர் மது பாட்டில்களை வாங்கி உள்ளார். இந்த நிலையில் அந்த மதுவை குடித்ததால் மணிகண்டனுக்கு வாந்தி பேதி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மணிகண்டன் அன்னூரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில், பிரபு கையும் களவுமாக அகப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியையும் போலீஸார் தேடி வந்தனர்.
இப்படியிருக்க அன்னூர் கைகாட்டி பிரிவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது கேரளா பதிவு எண் கொண்ட கார் ஒன்று அங்கு வந்தது. அதை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது உள்ளே 70-க்கும் மேற்பட்ட பாண்டிச்சேரி மற்றும் வெளிநாட்டு மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரிடமிருந்த மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றியதுடன் காரையும் கைப்பற்றி தீவிர விசாரணையில் நடத்தி வருகின்றனர்.