கோவை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மத்திய அரசு பழிவாங்கல் நடவடிக்கையை மேற்கொள்ளாமல், தண்டனை அனுபவித்து வருபவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மத்திய அரசு பழிவாங்கல் நடவடிக்கையை மேற்கொள்ளாமல், தண்டனை அனுபவித்து வருபவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகிகள் குழு கூட்டம் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், "மத்திய-மாநில அரசுகளின் நடவடிக்கைகள் குறித்தும், அவற்றை கண்டித்து இனி வரும் காலங்களில் முன்னெடுக்கவுள்ள போராட்டங்கள் குறித்தும் நிர்வாகிகள் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மத்திய அரசில் அங்கம் வகிக்கும் யாரும் ஊழல் செய்வதில்லை என தெரிவித்து வரும் நிலையில், பிரான்ஸ் நாட்டுடனான ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக அந்நாட்டின் முன்னால் பிரதமரே தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இன்னும் மவுனமாக இருப்பதே உழல் நடந்திருப்பதை உறுதி செய்கிறது.
கருத்துகளை தெரிவித்து வருபவர்களை தமிழக அரசு தொடர்ந்து கைது செய்து வரும் நிலையில், இன்னும் எச்.ராஜா, எஸ்.வி சேகரை கண்டு ஏன் அஞ்சி நடுங்குகின்றனர்?. எச். ராஜா விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவிக்கும் நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை என துணை முதலமைச்சர் தெரிவிக்கின்றார். அமைச்சர்களுக்குள் ஒற்ற கருத்து இல்லை.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியும், மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது. இதில் பழிவாங்கல் நடவடிக்கை மேற்கொள்ளாமல் விடுதலை செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்." என்று அவர் கூறினார்.