கோவை: மாநகராட்சி தொடக்க பள்ளி முதன்முதலில் ஸ்மார்ட் பள்ளி திட்டத்தை அறம் அறக்கட்டளை தொடங்கியது.
கோவை: மாநகராட்சி தொடக்க பள்ளி முதன்முதலில் ஸ்மார்ட் பள்ளி திட்டத்தை அறம் அறக்கட்டளை தொடங்கியது.

அறம் அறக்கட்டளை சார்பில் சரவணம்பட்டி சுற்றுவட்டாரங்களில் உள்ள 12 பள்ளிகளில் ஸ்மார்ட் பள்ளி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளில் பல்வேறு புதிய யுக்திகளுடன் தொடங்கப்பட்ட இந்த திட்டம் தற்போது அரசு தொடக்கப்பள்ளியில் தொடங்கப்பட்டுள்ளது.
செல்வபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் வரும் அரசு தொடக்கப்பள்ளியில், அறம் அறக்கட்டளை மற்றும் ப்ரோபெல் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை இணைந்து தொடங்கியுள்ளன.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவி இந்த திட்டத்தினை தொடங்கி வைத்தார். இது குறித்து அப்பள்ளியின் தலைமையாசிரியர் கூறுகையில், "அறம் அறக்கட்டளை மாணவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கும், அவர்கள் பல்வேறு பிரச்சனைகளை விழிப்புணர்வுடன் புரிந்து கொள்ளவும் இந்த ஸ்மார்ட் வகுப்பு உதவும். மேலும், மாணவர்களை உற்சாகத்துடன் பள்ளிக்கு வரவழைக்கும்.
இந்த ஸ்மார்ட் பள்ளி திட்டத்தின் மூலம், 1 முதல் 6-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கல்வி பயில உள்ளனர். வகுப்புகள் தேர்வு விடுமுறைக்கு பிறகு தொடங்கும். அறம் அறக்கட்டளையின் இரண்டு ஆசிரியர்கள் முதலில் எங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு இது குறித்து விளக்கமளிப்பார்கள். எனினும், ஒரு நாளைக்கு 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை இந்த வகுப்புகள் நடைபெறும்." என்றார்.

திட்டத்தின் நோக்கங்கள் "நவீன போதனை வழிமுறைகள் மற்றும் அசாதாரணங்களை அடையாளம் காண்பது" என்றாலும், இது ஒவ்வொரு குழந்தைக்குமான நுண்ணறிவுகளை கவனித்துக் கொள்ளும் கேலிச்சித்திர அட்டைகளுடன் வருகிறது.
நாட்டில் முதன்முறையாக மாநகராட்சி பள்ளியில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது கோவையில் தான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
