நீலகிரி : கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த பெண் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செம்மநாரை ஆதிவாசி கிராமத்தில் வசி்த்து வருபவர் சரசு. இவர், தேயிலை எஸ்டேட்டில் வேலைக்கு சென்று கொண்டிருந்த போது அங்கு மறைவில் இருந்த காட்டு யானை தாக்கியுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், காயங்களுடன் அங்கிருந்த தேயிலை செடிக்குள் பதுங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து, அங்கிருந்த பொதுமக்களை துரத்தியது. பின்னர், அங்கிருந்து யானை அருகே உள்ள வனப்பகுதிக்குள் சென்று விட்டது. அதன்பின், சரசுவை மீட்ட தேயிலை தொழிலாளர்கள் சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
கோத்தகிரி பகுதியில் யானை மிதித்து நேற்று ஒருவர் உயிரிழந்த நிலையில், இன்று பெண் ஒருவரை யானை தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.