டெம்போ கவிழ்ந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த மடத்துக்குளம் எம்.எல்.ஏ.,

திருப்பூர் : உடுமலை அருகே டெம்போ கவிழ்ந்த விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மடத்துக்குளம் தி.மு.க., எம்.எல்.ஏ., இரா. ஜெயராமகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

திருப்பூர் : உடுமலை அருகே டெம்போ கவிழ்ந்த விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மடத்துக்குளம் தி.மு.க., எம்.எல்.ஏ., இரா. ஜெயராமகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 



உடுமலை அருகே நாட்டுக்கல் பாளையத்தில் விவசாய வேலைக்கு கூலி ஆட்களை (பெண்கள் ) டெம்போவில் 70-க்கும் மேற்பட்ட பெண்கள் ஏறிச் சென்றுள்ளனர். அதிக பாரம் மற்றும் ஓட்டுநா் குடிபோதையில் இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த டெம்போ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் 40 பெண்கள் ஆம்புலன்ஸ் மூலமாக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், பலத்த காயமடைந்த 8 பெண்கள் மேல்சிகிச்சைக்காக அருகே தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மீதமுள்ளவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 



இதனிடையே, காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட டெம்போ ஓட்டுநா் மற்றும் உரிமையாளா் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி நேற்றிரவு மருத்துவமனையில் முற்றுகை போராட்டம் நடத்தினர். பின்னர், அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதால், போராட்டம் கைவிடப்பட்டது. 



இந்த நிலையில், இன்று மடத்துக்குளம் தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், மருத்துவர்களிடம் தரமான வகையில் மருத்துவம் செய்யவும், காயமடைந்த பெண்கள் அனைவருக்கும் அரசு மருத்துவமனையில் வைத்தே உரிய சிகிச்சை அளிக்க அவர் உத்தரவிட்டார். தொடர்ந்து, காயமடைந்த பெண்களிடம் எம்.எல்.ஏ., இரா.ஜெயராமகிருஷ்ணன், தாங்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றி கேட்டறிந்தார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...