கோவை: கோவை மாவட்டத்தில் சின்ன வெங்காயம் அழுகியதன் காரணமாக நஷ்டம் அடைந்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் அழுகிய வெங்காயங்களுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தொண்டாமுத்தூர், நரசீபுரம், போளுவாம்பி, செம்மேடு மற்றும் பேரூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சின்ன வெங்காயம் நடவு செய்து சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
தற்போது அறுவடை செய்கின்ற காலத்தில் போதிய விலை கிடைக்காததால் சின்ன வெங்காயம் பட்டறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பட்டறையில் அதிக வெப்பம் மற்றும் காற்றின்மை காரணமாக தற்போது அழுகல் ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் அழுகிய வெங்காயங்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், சின்ன வெங்காயம் அழுகல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிறு விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பு வழங்க வேண்டும் எனவும் முறையான பட்டறை வசதி அமைத்து தரக் கோரியும் வலியுறுத்தினர்.