மாநகராட்சி பகுதியில் மாற்று இடம் வழங்காவிட்டால் ரேசன் கார்டுகளை ஒப்படைப்போம் - ஜீவா நகர் மக்கள் போராட்டம்

கோவை: நீதிமன்ற தீர்ப்பின் படி குடியிருப்புகளுக்கு மாநகராட்சி பகுதியில் மாற்று இடம் வழங்காத பட்சத்தில் ஆதார் மற்றும் ரேசன் கார்டுகளை ஒப்படைக்கப் போவதாக கூறி ஜீவா நகர் பகுதி பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: நீதிமன்ற தீர்ப்பின் படி குடியிருப்புகளுக்கு மாநகராட்சி பகுதியில் மாற்று இடம் வழங்காத பட்சத்தில் ஆதார் மற்றும் ரேசன் கார்டுகளை ஒப்படைக்கப் போவதாக கூறி ஜீவா நகர் பகுதி பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மேட்டுப்பாளையம் சாலை அருகே உள்ள ஜீவா நகரில் கடந்த 40 ஆண்டுகளாக 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 1988-ம் ஆண்டு குடிசை மாற்று வாரியம், ஜீவா நகர் பகுதியை தத்தெடுத்து ஓட்டு வீடுகள் கட்டுவதற்கு கடன் வழங்கியது.

இந்த நிலத்திற்கான ஒரு லட்சம் கிரையத் தொகை மற்றும் குத்தகை தவணைத் தொகைகளை கடந்த மூப்பது ஆண்டுகளாக செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜீவா நகரில் இருக்கும் வீடுகளை அப்புறப்படுத்தக் கோரி குடிசை மாற்று வாரியத்திற்கு எதிராக தனியார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கில் தனியாருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததை அடுத்து அங்குள்ள வீடுகளை அப்புறப்படுத்த மாநகராட்சி முயற்சித்து வருகிறது. இதனால் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மாநகராட்சி பகுதியிலே தங்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் குடும்பத்துடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாமல் காவல்துறையும் அதிகாரிகளும் தங்களை, அப்புறப்படுத்த அச்சுறுத்தி வருவதாக வருத்தம் தெரிவித்த பொதுமக்கள், தங்களது கோரிக்கையை ஏற்காவிட்டால், குடிமக்களுக்கான ஆதார் மற்றும் அடையாள அட்டைகளை அரசிடமே திரும்ப கொடுக்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும், உடனடியாக மாநகராட்சி பகுதியில் நீதிமன்ற தீர்ப்பு படி மாற்று இடம் வழங்கக் கோரி வலியுறுத்தியவர்கள் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...