கோவை: சாலை பாதுகாப்பு மற்றும் தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் மாற்றுத்திறனாளி ஒருவர் விழிப்புணர்வு பயணத்தை துவங்கியுள்ளார்.
கோவை: சாலை பாதுகாப்பு மற்றும் தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் மாற்றுத்திறனாளி ஒருவர் விழிப்புணர்வு பயணத்தை துவங்கியுள்ளார்.
கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரின்ஸ். மாற்றுத்திறனாளியான இவர், அரசு மருந்தகத்தில் மருந்தாளுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சாலை பாதுகாப்பையும், தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு கார் பயணத்தை பிரின்ஸ் துவங்கியுள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தொடங்கிய இப்பயணம் தமிழகம் முழுவதும் 42 நகரங்கள் வழியாக ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் செல்ல உள்ளதாகவும், 10 நாட்களில் மீண்டும் கோவையில் நிறைவு பெறவுள்ளதாகவும் பிரின்ஸ் தெரிவித்தார்.
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனி நபராக இப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மாற்றுத்திறனாளியான பிரின்ஸ் காரின் எக்ஸலேட்டரை கையால் இயக்கம் வகையில் வாகனத்தை வடிவமைத்துள்ளார்.