அன்னூர் அருகே ஜே.சி.பி., இயந்திர ஓட்டுநரின் கவனக்குறைவால் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் விலையுயர்ந்த பொருட்கள் சேதம்

கோவை : அன்னூர் அருகே குழாய் பதிக்க குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஜே.சி.பி., இயந்திரம், அங்கிருந்த மின்கம்பத்தில் உரசியதால் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் டி.வி., வாசிங் மெஷின், குளிர்சாதனப் பெட்டிகள் சேதமடைந்தன.

கோவை : அன்னூர் அருகே குழாய் பதிக்க குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஜே.சி.பி., இயந்திரம், அங்கிருந்த மின்கம்பத்தில் உரசியதால் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் டி.வி., வாசிங் மெஷின், குளிர்சாதனப் பெட்டிகள் சேதமடைந்தன.

அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த நிலையில், மழை ஓய்ந்தவுடன் அன்னூர் ஒன்றியத்திற்குட்பட்ட முதலிப்பாளையத்தில் குழாய் பதிப்பதற்கான பணி ஜே.சி.பி., இயந்திரத்தின் உதவியுடன் நடைபெற்றது. அப்போது, சாலை ஓரத்தில் குழி தோண்டிய போது, எதிர்பாராதவிதமாக ஜே.சி.பி., இயந்திரத்தின் மேல் பகுதி மின்கம்பத்தில் உரசியது. இதனையடுத்து, பயங்கர வெடிசத்தம் ஏற்பட்டு கம்பத்தில் தீப்பொறி கிளம்பியது. 



மேலும், முதலிப்பாளையத்தில் உள்ள ரோஜா நகர், சிவா கார்டன் போன்ற பகுதியில் வீடுகளில் இருந்த டி.வி., வாசிங் மெசின், மின் விளக்குகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அந்தப் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த மின் மோட்டார், மின் விளக்குகள் என அனைத்தும் சேதமானது. இதனையடுத்து, அந்தப் பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 



இது குறித்து அன்னூர் காவல்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர், நிகழ்விடத்திற்கு சென்ற காவல்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகள் பிரச்சனைக்கு காரணமான ஜே.சி.பி., இயந்திர ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர். ஒட்டுமொத்தமாக சேதமடைந்த பொருட்களின் மதிப்பு ரூ. 5 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்பதால் மாவட்ட மின்வாரிய நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...