கோவை : கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
கோவை : கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
திருப்பூர் மாவட்டம் முழுவதுமே காலை முதல் வெயில் அதிகளவில் காணப்பட்டு வந்தது. இதனால், பொதுமக்கள் பெருமளவில் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில், மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், திடீரென இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது. பலத்த காற்றுடன் பெய்த மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மரக்கிளைகளும் உடைந்து விழுந்தன.

திருப்பூர் மாநகரப் பகுதிகள் மட்டுமல்லாது மாவட்டத்தின் பல்லடம், காங்கேயம், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ய தொடங்கியது. காங்கேயம், வெள்ளக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நெல்நடவு பணிகள் துவங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பெய்துள்ள மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதேபோல, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.