திருப்பூர் : திருப்பூரில் நேற்று நடைபெற்ற திறனாய்வு தேர்வை 1,253 மாணவ, மாணவிகள் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எழுதினர்.

தமிழக அரசின் தேர்வுகள் இயக்கம் சார்பில் ஊரக பகுதி மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வை அறிவித்து இருந்தது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கு மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வை எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்தத் தேர்வை எழுதும் பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதைதொடர்ந்து, மாவட்ட முழுவதிலும் இருந்து தகுதியுடைய 1,571 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர்.
இந்தத் தேர்வுகள் திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காங்கயம் அரசு உயர்நிலைப்பள்ளி, தாராபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி, உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 பள்ளிகளில் தேர்வு நடந்தது. நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு மதியம் 12.30 மணிக்கு முடிந்தது. மாவட்டம் முழுவதும் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்த மாணவ, மாணவிகள் 1,252 பேர் மட்டும் தேர்வு எழுத வந்திருந்தனர். 318 மாணவ,மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.
இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறக்கூடிய மாணவர், மாணவிகளுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை ஆண்டுதோறும் ரூ. 6,000 படிப்பு உதவித்தொகையாக வழங்கப்படும் என மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.