நீலகிரி : குன்னூர் அருகேயுள்ள வீடுபுகுந்து திருடமுயன்ற கொள்ளையனை மடக்கிப் பிடித்த பொதுமக்கள், தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

குன்னூர் அருகே உள்ள எடப்பள்ளி ஆரக்கம்பை கிராமத்தில் நேற்றிரவு பல்வேறு பூட்டிய வீடுகளை நோட்டமிட்டுக் கொண்டிருந்தவரை இந்த கிராமத்து இளைஞர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், அவர் சில பூட்டிய வீடுகளை உடைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்தக் கொள்ளை முயற்சியின் போது, அங்கு மறைந்திருந்த உள்ளூர் இளைஞர்கள் சிலர், அவரை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். இதில், அவருக்கு முகம், கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர், அந்த நபரிடம் விசாரித்ததில் உதகை குழித்தலை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் என்பது தெரிய வந்தது. மேலும், இவர் ஏற்கனவே உதகை, குன்னூர் போன்ற பகுதியில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த நபரை பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.