மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் புள்ளி மானை வேட்டையாடிய 5 பேர் கைது

கோவை : மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கிகளை பயன்படுத்தி புள்ளி மானை வேட்டையாடிய 5 பேரை பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் கைது செய்தனர்.

கோவை : மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கிகளை பயன்படுத்தி புள்ளி மானை வேட்டையாடிய 5 பேரை பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் கைது செய்தனர். 

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பாலமலை, மாங்கரை, ஆனைகட்டி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் யானை, மான், கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இப்பகுதிகளில், அவ்வப்போது சில சமூக விரோதிகள் மான்களை வேட்டையாடி வருவதாக பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகர் சுரேஷ் தலைமையில் வனத்துறையினர் இரவு ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் பொன்மலை வனப்பகுதியினை ஒட்டிய பகுதியில் 2 இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியினை பயன்படுத்தி ஆண் புள்ளி மானை வேட்டையாடி, எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மானை வேட்டையாடிய காரமடை நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த அருள், துரை, கிருஷ்ணன், வேலுச்சாமி, சுரேஷ் ஆகிய 5 பேரை வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட 5 பேரிடம் இருந்து சுமார் மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மானின் உடல் மற்றும் இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், பேட்டரிகள், துப்பாக்கி குண்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், ஜந்து பேரும் மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...