கோவையில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை முயற்சி : மகன் பலி

கோவை : ஆவாரம்பாளையம் பகுதியில் கடன் தொல்லையின் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தில் மகன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவை : ஆவாரம்பாளையம் பகுதியில் கடன் தொல்லையின் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தில் மகன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

ஆவாரம்பாளையம் இளங்கோ நகர் முதலாவது வீதியில் வசித்து வருபவர் நாகராஜ் (45). இவர், கடந்த சில வருடங்களாக தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி தேன்மொழி (42). இந்த தம்பதிகளுக்கு ஆனந்தகுமார் (27) என்ற மகனும், சௌந்தர்யா என்ற மகளும் உள்ளனர். இதில், நகராஜின் வாரிசுகளுக்கு திருமணம் ஆன நிலையில், தந்தை நாகராஜ் மகன் ஆனந்த் குமார் உதவியுடன் பழ வியாபாரம் செய்து வந்தார். இதைத்தொடர்ந்து நேற்று விடுமுறை தினம் என்பதால் தந்தையும், மகனும், தாயும் வியாபாரத்திற்கு செல்லாமல் வீட்டில் இருந்தனர். 

இந்த நிலையில், கணவர் வீட்டில் வசித்து வரும் மகள் சவுந்தர்யா தனது சகோதரரின் செல்போனுக்கு அழைத்துள்ளார். ஆனால், பலமுறை அழைத்தும் தொலைபேசி அழைப்பை வீட்டில் யாரும் எடுக்காததால், சந்தேகம் அடைந்த அவர் நேரடியாக வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டில் மயங்கிய நிலையில், பெற்றோர்களும் சகோதரரும் இருப்பதைக் கண்ட சௌந்தர்யா அக்கம்பக்கத்தினர் மூலம் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தார். பின்னர், வந்த ஆம்புலன்ஸ் மூலம் மூன்று பேரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

இவர்கள் மூன்று பேரையும் மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர், ஆனந்த் குமார் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மற்ற இரண்டு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த தற்கொலை சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் நடத்திய விசாரணையில் கடன் தொல்லையால் இவர்கள் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்துள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...