கோவை: கோயம்பத்தூர் பத்திரிகையாளர்கள் மன்றத்தின் 2018-19ம் ஆண்டுக்காண் புதிய நிர்வாகிகள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்த மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் தலைவர் எஸ்.செந்தில்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் செயலாளர் எஸ்.சீனிவாசன் அறிக்கையினை தாக்கல் செய்தார்.
பொருளாளர் ஏ.ஆர்.பாபு வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, இணையதள ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களை மன்றத்தில் சேர்த்துக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பின்னர், புதிய நிர்வாகிகளுக்கான அறிவிப்பை மூத்த வழக்கறிஞரும் மன்றத்தின் தேர்தல் அதிகாரியுமான சி.ஞானபாரதி வெளியிட்டார்.
இதில் கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தின் தலைவராக ஏ.ஆர்.பாபு, செயலாளராக ம.சரவணன், பொருளாளராக கே.ரத்தன்குமார் மற்றும் துணை தலைவர்கள் ஜெ.ஷெர்லி, கே.காமராஜ், இணை செயலாளர்கள் சி.மணிகண்டன் க.தங்கராஜா தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், செயற்குழு உறுப்பினர்களாக ஜெ.மனோகரன், பி.ஆர்.முத்துபாண்டியன், பிரபாகரன், எம்.அலாவுதீன் காதர், ஜா.ஜாக்சன், ஆர்.சந்தோஷ்வேலாயுதம் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.