கோவை: ஈஷா அவுட்ரீச் சார்பில் கோவை செம்மேடு அரசு உயர் நிலைப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது. இதில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 159 கிராம மக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

கிராமப்புற ஏழை மக்களுக்கு மருத்துவ சேவை அளிக்கும் நோக்கத்தில் ஈஷா அவுட்ரீச் அமைப்பானது, கோவை அரவிந்த் கண் மருத்துவனை மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம்களை கோவை மாவட்டத்தில் அவ்வப்போது நடத்தி வருகிறது.
அதன்படி, ஈஷா அவுட்ரீச், அக்னி சிறகுகள் நற்பணி மன்றம் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை சார்பில் செம்மேட்டில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது.

காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 159 கிராம மக்கள் பங்கேற்றனர். முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், கண் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு முகாமிலேயே குறைந்த விலையில் கண்கண்ணாடி வழங்கப்பட்டது.
கண்புரை பாதிப்புள்ள நோயாளிகள் மேல்சிகிச்சைக்காக கோவை அரவிந்த் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.