கோவை: வனவிலங்குகள் வாரத்தின் ஒரு பகுதியாக இன்று மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தமிழ்நாடு வனக்கல்லூரியில் பல்வேறு போட்டிகளை நடத்த வனத்துறை முடிவு செய்தது.

வன விலங்குகளை காப்பதன் அவசியம் மற்றும் பங்களிப்பு என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவியப்போட்டியில் 182 மாணவர்கள் பங்கேற்றனர். வினாடி-வினா போட்டியில் 40க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும், வனத்தை காப்பது குறித்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கட்டுரைப் போட்டியும் நடைபெற்றது.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "பள்ளி மற்றும் கல்லூரியில் இருந்து அனுமதிக் கடிதம் வாங்கி வந்த மாணவர்கள் இதில் அனுமதிக்கப்பட்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் வனத்துறை மூலம் சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பார்கள்." என்றனர்.