நீலகிரி: கோத்தகிரி அருகே உள்ள தட்டப்பள்ளம் பகுதியில் சுற்றுலா வந்த வாகனம் எரிந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக நான்கு பேர் உயிர் தப்பினர்.

கோவை பேரூரைச் சேர்ந்தவர் கருப்பசாமி-ராமலதா தம்பதியினர். இவர்கள் தங்களது இரண்டு குழந்தைகளுடன் நீலகிரிக்கு காரில் சுற்றுலா சென்றனர். அவர்களது கார் கோத்தகிரி தட்டப்பள்ளம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென காரில் இருந்து புகை வெளிவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து காரில் இருந்து இறங்கிய கருப்பசாமி, பானட்டை திறந்து பார்த்தார். அப்போது தீ மளமளவென எரியத் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து வாகனத்தில் இருந்த ராமலதா மற்றும் குழந்தைகள் காரில் இருந்து உடனடியாக இறக்கப்பட்டனர்.
இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலைத் தொடர்ந்து அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.