தி.மு.க.,வின் மூத்த உறுப்பினரான கோவையைச் சேர்ந்த 103 வயது பாட்டி, அக்கட்சித் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்தினார்.

தி.மு.க.,வில் பல்வேறு மூத்த தலைவர்கள், உறுப்பினர்கள் உள்ளனர். வயதில் மிக மூத்த உறுப்பினர் என்றால் பொதுச்செயலாளர் அன்பழகன் தான் என்று அனைவரும் நினைத்திருந்ததை பொய்யாக்கும் விதத்தில் மிக மூத்த உறுப்பினர் ஒருவர் அண்ணா அறிவாலயம் சென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
அவர் 103 வயதான, மிக மூத்த உறுப்பினரான ரங்கம்மா பாட்டி. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கம்மா. கடந்த வாரம் அண்ணா அறிவாலயம் சென்ற அவர் தி.மு.க தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்தினார்
அவருக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். ரங்கம்மா பாட்டியின் திடமான உடல் நலம், ஞாபக சக்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. பல ஆண்டுகளாக தி.மு.க.,வில் உறுப்பினராக இருந்து வரும் ரங்கம்மா, அவருடைய கிராமத்தில் பஞ்சாயத்துத் தலைவராகவும், தி.மு.க.,வில் பல்வேறு பொறுப்புகளிலும் இருந்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ''மறைந்த தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதியை நேரில் சந்திக்க வேண்டிய எண்ணம் இருந்தது. சூழ்நிலை காரணமாக நிறைவேறாமல் போனது. ஆனால், இன்று தி.மு.க தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். அது மிக மகிழ்ச்சி அளிக்கிறது.'' என்று அக்கட்சியின் மிக மூத்த உறுப்பினர் ரங்கம்மா பாட்டி தெரிவித்தார்.