கோவை: சிங்காநல்லூர் குளத்தில் நேற்று நடைபெற்ற பூச்சிகள் கணக்கெடுப்பில் 100-க்கும் மேற்பட்ட பூச்சி இனங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன.

கோவை: கோவை மாநகராட்சி மற்றும் கியூப் தன்னார்வ அமைப்பு இணைந்து சிங்காநல்லூர் குளத்தில் உள்ள பூச்சியினங்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு நாட்கள் நடக்கும் இந்த கணக்கெடுப்பு நேற்று (சனிக்கிழமை) தொடங்கியது.

இந்திய விலங்கியல் ஆய்வு அமைப்பைச் சேர்ந்த வசந்தகுமார் தலைமையில் இரவு பகலாக நடைபெற்ற இந்த கணக்கெடுப்பு பணியில், பூச்சி இனங்களை கண்டறிய மூன்று யுக்திகள் பயன்படுத்தப்பட்டது. நேரடியாக பூச்சிகளை பார்த்து கணக்கிடுதல்,வலைகள் மூலம் பூச்சிகளை கணக்கிடுதல் மற்றும் இரவு வெளிச்சத்தில் கணக்கிடுதல்.

இதன் மூலம், சிங்காநல்லூர் குளத்தில் பூச்சிகள் மற்றும் சிலந்திகள் என தற்போது வரை 100-க்கும் மேற்பட்ட உயிரின வகைகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து வசந்தகுமார் கூறுகையில், "சூழலியலை பாதுகாப்பதில் பூச்சிகள் பெரும் உதவி செய்பவை. பூச்சிகளின் இருப்பை கணக்கிட்டு ஒரு குளத்தின் தன்மையை நம்மால் தெரிந்து கொள்ள முடியும். 10 பேர் கொண்ட குழுவினர் பல்வேறு வழிமுறைகளை இதில் பயன்படுத்தியுள்ளனர்." என்றார்.

இது குறித்து கியூப் அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர் வருண் கூறுகையில், "பூச்சிகள் பல்வேறு விதங்களில் இயற்கைக்கு உதவுகின்றன. ஊர்வன மற்றும் பறவையினங்களுக்கு உணவாகின்றன. இந்த குளத்தில் மியாவக்கி முறையில் மரங்கள் நடவு செய்யப்பட்ட இடத்தில் நிறைய பூச்சி இனங்கள் காணப்பட்டன." என்றார்.