கோவையில் வகுப்பறையை இன்றி தவிக்கும் மாணவர்கள் : மரத்தடி மற்றும் வராண்டாக்களில் அமர்ந்து கல்வி கற்கும் அவலம்

கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட பேரூர் ஒன்றிய தொடக்கப்பள்ளியின் வகுப்பறையை பயன்படுத்தி வந்த நடுநிலைப்பள்ளி அதனை திருப்பி அளிக்காததால், மாணவர் மரத்தின் அடியிலும், வராண்டாவிலும் அமர்ந்து பாடம் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட பேரூர் ஒன்றிய தொடக்கப்பள்ளியின் வகுப்பறையை பயன்படுத்தி வந்த நடுநிலைப்பள்ளி அதனை திருப்பி அளிக்காததால், மாணவர் மரத்தின் அடியிலும், வராண்டாவிலும் அமர்ந்து பாடம் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 



கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு மண்டலத்தில் காமராஜ் நகரில் பேரூர் ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், தற்போது 257 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், பள்ள வளாகத்தில் செயல்பட்டு வந்த நடுநிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டி உயர்நிலைப் பள்ளி அந்தஸ்து வழங்கிட அரசு முடிவெடுத்தது. 



அதன்படி, கடந்தாண்டு புதிய கட்டிடமும் கட்டப்பட்டுள்ளது. பழைய பள்ளிக்கு சிறிது நாட்கள் வகுப்பறைகள் தந்து உதவிய தொடக்கப்பள்ளிக்கு மீண்டும் வகுப்பறைகளை ஒதுக்கீடு செய்யாததால், மாணவர்கள் மரத்தடியில் மற்றும் வராண்டாவில் அமர்ந்து படிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. 



இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறியதாவது :- பள்ளி 80 சென்ட்டில் இயங்குகிறது. ஓரே வளாகத்தில் தொடக்கப்பள்ளி

மற்றும் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வந்தது. நடுநிலைப்பள்ளியின் தரத்தை உயர்த்திட புதிய கட்டிடம் கட்ட அரசு எடுத்த முயற்சிக்கு மக்களின் ஒத்துழைப்பு தந்தோம். புதிய கட்டிடம் எழுப்பும் வரை இரண்டு வகுப்பறைகளை தற்காலிகமாக பெற்ற நடுநிலைப்பள்ளி கட்டுமானப் பணிகள் முடிந்து செயல்பாட்டுக்கு வந்த பின்னரும், தொடக்கப் பள்ளியின் வகுப்பறைகளை திருப்பித் தரவில்லை.

இது குறித்து ஆசிரியர்கள் அனைத்து தரப்பிலும் தகவல் அளித்தும் இன்று வரை வகுப்பறை தராமல் அரசு நிர்வாகம் உள்ளது. அரசு பள்ளிக்கு அரசே பாரபட்சம் பார்த்தால் மாணவர்கள் கல்வி என்னாகும். அரசுப் பள்ளிக்கூடங்களில் மாணவர்களை படிக்க வைக்க பெற்றோர்கள் ஆர்வப்பட்டாலும், கல்வி துறை அக்கறை காட்டவில்லை. இதனால், மாணவர்கள் மரத்தடி, வகுப்பறை வராண்டா ஆகியவற்றில் அமர்ந்து கல்வி கற்று வருகின்றனர்.



வெயில் அதிகரித்தால் கழிப்பறை அருகே தான் மாணவர்கள் கல்வி கற்க வேண்டியுள்ளது. மேலும், துர்நாற்றம் வீசுவதால், உடல் ஒவ்வாமை ஏற்படுகிறது. இது குறித்து எத்தனை முறை சொல்லியும் பயன் இல்லை. பற்றாக்குறைக்கு இந்தப் பள்ளியில் ஆங்கிலவழி, தமிழ்வழி பாடங்கள் ஒரு வகுப்பறையில் இரு ஆசிரியர்கள் நடத்தும் போது மாணவர்களின் கல்வி கவனிப்பு சிதறடிக்கப்படுகிறது. எனவே, இப்பள்ளிக்கென உள்ள வகுப்பறையை வழங்கி மாணவர்களின் கல்வி மற்றும் நல்ல எதிர்காலத்தை உருவாக்கி தர வேண்டும், இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர். 



தனியார் பள்ளிகளுடன் போட்டி போட வேண்டிய நிர்பந்தத்தில் உள்ள அரசு பள்ளிகளில், இப்படி மாணவர்களை மண் தரை மற்றும் மரத்தடியில் அமர வைத்து படிக்க வைப்பது சட்டப்படி குற்றமாகும். இதை அரசு கவனிக்காமல் அலட்சியம் செய்வது மாணவர்களின் உடல், மனம் பாதிக்கப்படும் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...