திருப்பூர்: முதலமைச்சர் மற்றும் காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கருணாஸை உடனடியாக கைது செய்த போலீசார், சர்ச்சை பேச்சு பேசிய எச்.ராஜாவை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று அ.ம.மு.க.,வின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கேள்வி எழுப்பினார்.

உடுமலையில் செய்தியாளா்களை சந்தித்த அவர் கூறுகையில், ":தமிழக அரசு கைது நடவடிக்கையில் பாரபட்சமாக செயல்பட்டு வருகிறது. கருணாஸை உடனடியாக கைது செய்த காவல்துறை, நீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய எச்.ராஜாவை ஏன் கைது செய்யவில்லை.

மத்திய அரசின் அடிமைகளாக தமிழக அரசு இருப்பதே இதற்கு காரணம். அதனை மீண்டும் தமிழக ஆட்சியாளா்கள் நிரூபித்துள்ளனர். துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஒரு பசுந்தோல் போர்த்திய புலி. காவல்துறை மீது கருணாஸ் பேசியதை ஒரு விதத்தில் சரியானதாகவும் எடுத்துக் கொள்ளலாம். எச்.ராஜா காவல்துறைக்கு கல்லீரல் அழுகிப் போனது என்று கூறியதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

அ.தி.மு.க.,வின் 90% தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர். நகைச்சுவை நடிகர் வடிவேலு தற்போது சினிமாவில் நடிக்காத நிலையில் அமைச்சர்கள் காமெடி செய்து வருகின்றனர். தமிழகத்தில் தேசிய கட்சிகள் எந்த காலத்திலும் ஆட்சி அமைக்க முடியாது. திருப்பரங்குன்றம், திருவாரூர் தேர்தலில் வெற்றி பெற்ற பின் ஆட்சியாளர்கள் வாய்திறக்க மாட்டார்கள். கருணாஸ் பேசிய வார்த்தைகள் வேதனையடைவதாக உள்ளது, அவர் பொது மேடைகளில் அடக்கத்தோடு பேச வேண்டும்." என்றார்.