கோத்தகிரி அருகே யானை தாக்கியதில் தொழிலாளி பலி

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே யானை தாக்கியதில் தேயிலை தோட்ட தொழிலாளி பரிதாபமாக பலியானார்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே யானை தாக்கியதில் தேயிலை தோட்ட தொழிலாளி பரிதாபமாக பலியானார்.

கோத்தகிரி கூட்டடா பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் சாமிதாஸ் (63). இன்று காலை வீட்டின் வெளியே நாய் குரைத்துக் கொண்டிருந்ததைப் பார்க்க வெளியே சென்றார். அப்போது வெளியில் குட்டியுடன் யானை ஒன்று வீட்டின் முன் கொய்யா பழத்தைத் தின்று கொண்டிருந்தது.

இதனை கவனிக்காத சாமிதாஸ் யானை அருகே சென்றார். அப்போது திடீரென அவரை யானை தாக்கியது. மேலும், காலில் மிதித்தது. இதில் சாமிதாஸ் அங்கேயே உயிரிழந்தார். இதுகுறித்து கோத்தகிரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சாமிதாசின் உடலை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். யானை தாக்கி தொழிலாளி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...