கேரளா : பாலியல் பலாத்காரப் புகாரில் பிஷப் பிரான்கோ முல்லக்கல்லுக்கு 3 நாள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் கன்னியாஸ்திரிகள் நடத்தி வந்த 14 நாட்கள் தொடர் போராட்டம் இன்று கைவிடப்பட்டது.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் குருவிலாங்காடு பகுதியில் சிரியோ மலபார் கத்தோலிக்க தேவலாயத்திற்கு சொந்தமான விடுதி உள்ளது. இங்கு தங்கியிருந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் பணிபுரிந்த பிஷப் பிராங்கோ முல்லக்கல் மீது கோட்டயம் மாவட்ட எஸ்.பி.,யிடம் பாலியல் பலாத்காரப் புகார் கூறினார். பிஷப் தன்னை 13 முறை பலாத்காரம் செய்ததாக அவர் கூறியிருந்தார். இதனை மறுத்த பிஷப், இந்த விவகாரத்தின் பின்னணியில் சதி உள்ளதாகவும், கன்னியாஸ்திரி மீதான புகார் குறித்து விசாரணை நடத்தியதால் தன் மீது அவர் புகார் கூறியதாகவும் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராக பிஷப்புக்கு கேரள போலீசார் சம்மன் அனுப்பினர். இதைத் தொடர்ந்து, பிராங்கோ முல்லக்கல் பிஷப் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, பாலியல் புகார் தொடர்பாக கொச்சி அருகே திருபுனித்துரா என்ற இடத்தில் உள்ள கிரைம் பிராஞ்ச் போலீஸ் அலுவலகத்தில் பிஷப்பிடம் 3 நாள் விசாரணை நடந்தது. விசாரணை முடிந்த நிலையில், அவரை போலீசார் நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிமன்ற விசாரணையின்போது, பிஷப் பிரான்கோ முல்லக்கல்லின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், கன்னியாஸ்திரியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிஷப்பை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், பிஷப்பை கைது செய்ய வலியுறுத்தி 5 கன்னியாஸ்திரிகள் நடத்தி வந்த போராட்டத்தை இன்று திரும்பப் பெற்றுக் கொண்டனர். இவர்களுக்கு ஆதரவாக கடந்த 14 நாட்களாக நடத்தப்பட்டு வந்த போராட்டத்தை ஆதரவு அமைப்புகளும் கைவிட்டனர். பிஷப் கைது தங்களுக்கு கிடைத்த வெற்றி என கன்னியாஸ்திரிகள் தெரிவித்தனர்.