நீலகிரி: கெத்தை அருகே கிராமப் பகுதிக்குள் உலா வந்த ஒற்றை காட்டு யானை, அங்குள்ள குடியிருப்பு மற்றும் கோவிலை இடித்து தள்ளியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர், கெத்தையை சுற்றியுள்ள வனப்பகுதியின் குடியிருப்பில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அப்பகுதிக்கு வந்த ஒற்றை காட்டு யானை திடீரென அங்குள்ள குடியிருப்பை தாக்கியுள்ளது.

மேலும், இங்குள்ள சக்தி மாரியம்மன் கோயிலையும் இடித்து தள்ளியுள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள் கூச்சலிட்டதைத் தொடர்ந்து, ஒற்றைக் காட்டு யானை மீண்டும் வனப் பகுதிக்குள் சென்றது.

இப்பகுதியில், பலாப்பழங்ளை உண்ண வரும் ஒற்றை யானை பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாகவும், இதனை அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் விரட்ட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல, இன்று காலை கூடலூர், தொண்டிப்பள்ளம் பகுதியில் இன்று காலை காட்டு யானை தாக்கி படுகாயடைந்த காளிமுத்து என்ற தொழிலாளி கேரளாவில் சிகிச்சை பெ.ற்று வருகிறார். எனவே, இப்பகுதியில் சுற்றித் திரியும் இந்த ஒற்றை காட்டு யானையையும் அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் விரட்ட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.